செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காவலர் கொலை : போலீசார் உண்மையை மறைப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

02:08 PM Apr 01, 2025 IST | Murugesan M

மதுரை உசிலம்பட்டி அருகே காவலர் கொலை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட நபர் குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

உசிலம்பட்டி அடுத்த கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பொன்வண்ணன் என்பவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது உயிரிழந்து விட்டாரா என்பது குறித்துத் தெரிவிக்காமல் போலீசார் உண்மையை மறைப்பதாக பொன்வண்ணனின் மனைவி வேதனை தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
MAINPoliceman's murder: Relatives accuse police of hiding the truth!காவலர் கொலை
Advertisement
Next Article