செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காவலர் தேர்வு : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

07:05 PM Apr 04, 2025 IST | Murugesan M

காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை  வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம்.

Advertisement

இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது. திமுக அரசு செய்த தவற்றால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது என்றும் உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINDMKbjp k annamalaiMK StalinPolice selection: Annamalai condemns DMK government!
Advertisement
Next Article