காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்! : தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறைக்கென தனியே அமைச்சரை நியமிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக காவல்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், உடனடியாக நிர்வாக சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகம் வன்முறையின் விளைநிலமாக மாறி வருவது வேதனைக்குரியது எனவும் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மையை கண்டறிய காவல்துறை முழு முயற்சி எடுக்கவில்லை எனவும் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
மேலும், காவல் துறையினர் மீது பதியப்படும் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவும் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.