காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
07:10 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
தமிழகக் காவல்துறையில் 3 உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
அதன்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜியாக இருந்த ப்ரவேஷ் குமார், சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாகக் காவல் விரிவாக்கப் பிரிவு ஐ.ஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
மேலும், காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நரேந்திரன் நாயரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisement