செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் : உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

05:45 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் FIR நகல் வெளியான விவகாரத்தில் விசாரணை என்ற பெயரில் காவல்துறை எல்லை மீறினால் பத்திரிகையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

அதில், விசாரணை என்ற பெயரில் காவல்துறை செய்தியாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதாகவும், தனிப்பட்ட விவரங்களை கேட்டு துன்புறுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இதில் தலையிட முடியாது என தெரிவித்தனர்.

Advertisement

அதற்கு பதில் அளித்த மனு தாரர் தரப்பு காவல்துறை ஆணையர் குறித்த கருத்துக்கள் தொடர்பான மேல்முறையீடு தான் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், பத்திரிகையாளர் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் விசாரணை குறித்து தெளிவாக குறிப்பிட்டதாகவும், அதன் அடிப்படையில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் காவல்துறை விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களிடம் எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினார்.

Advertisement
Tags :
annauniversity issueFEATUREDFIRIssue of FIR copy: Journalists can approach the Supreme Court if the police cross the line!MAIN
Advertisement