செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் : விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே - அண்ணாமலை அறிவுறுத்தல்!

03:30 PM Jan 10, 2025 IST | Murugesan M

 காவல்துறை மீது  கடற்படை வீரருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் இளமாறன், தமிழக போலீசாரைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்,' 2024 ஜன., மாதம் தன்னுடைய பாட்டியை கொடூரமாக  கொலை செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதே சம்பவர் காவல்துறை உயரதிகாரிகள்  வீட்டில் நடந்திருந்தால் ஒரு மணிநேரத்தில்  குற்றவாளியை பிடித்திருப்பார்கள் எனறும் அவர் கூறினார். தம்மை கிரிமினல் ஆக்கி விடாதீர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் ஆகும். இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்யும் இந்த அதிகாரியின் பாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதுவரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியையும் கைது செய்யவில்லை. விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே, என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAIN
Advertisement
Next Article