காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகள் - ஒருவர் பலி, ஆபத்தான நிலையில் மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி!
12:42 PM Apr 10, 2025 IST
|
Ramamoorthy S
தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த சகோதரிகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம், நடுகாவிரியை சேர்ந்த அய்யா தினேஷ் என்பவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். தனது சகோதரரை விடுவிக்க கோரி அவரது சகோதரிகள் கீர்த்திகா, மேனகா ஆகியோர் நடுகாவிரி காவல் நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர்.
இதில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், மற்றொரு சகோதரி மேனகா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
இந்நிலையில் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு சகோதரிகள் விஷ மருந்தி, காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement