கிண்டி அரசு மருத்துவர் மீதான தாக்குதல் வழக்கு - விக்னேஷின் ஜாமின் மனு தள்ளுபடி!
அரசு மருத்துவமனையில் மருத்துவரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி பணியில் இருந்த அரசு மருத்துவர் பாலாஜியை வினேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
இதுதொடர்பாக விக்னேஷை கைது செய்த போலீசார் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதனையடுத்து விக்னேஷ் தரப்பில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.