செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குல் - ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

09:54 AM Nov 14, 2024 IST | Murugesan M

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியில் இருந்த அரசு மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் அதிர்ச்சியளிப்பதுடன், வன்மையாக கண்டிக்கத்தக்கது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement

மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ள அவர், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசர மற்றும் உடனடி நடவடிக்கை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் மருத்துவர் பாலாஜி விரைவாக உடல்நலம் பெற வேண்டிக் கொள்வதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Tags :
doctor balaji stabbedFEATUREDguindyKalaignar Centenary Super Speciality HospitalMAINRN Ravitamilnadu governor ravi
Advertisement
Next Article