செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேரை நாடு கடத்த ட்ரம்ப் முடிவு!

09:48 AM Mar 23, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் நாடு கடத்த டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

அமெரிக்காவில் ஜோ பைடன் அரசு, 2022 அக்டோபரில் மனிதாபிமான அடிப்படையில் ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், 'சி.எச்.என்.வி' திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் குடிபெயர்ந்த மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக குற்றம் சாட்டி அந்த திட்டத்தை ரத்து செய்தார்.

இதையடுத்து, கியூபா, ஹைதி, நிகரகுவா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சத்து 32 ஆயிரம் பேர் ஏப்ரல் 24-ந்தேதிக்கு பிறகு அமெரிக்காவில் தங்குவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழக்கின்றனர். ஏப்ரல் 24-ந்தேதிக்குள் அவர்கள் தாமாக தங்களின் நாடுகளுக்கு திரும்பாவிட்டால் அனைவரும் நாடு கடத்தப்படுவார்கள் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement
Tags :
‘CHNV’ program on humanitarian grounds000 people to deport532American jobs.cubaFEATUREDMAINTrump administrationvenezuela
Advertisement