கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு பெண் குழந்தை!
10:37 AM Mar 25, 2025 IST
|
Ramamoorthy S
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Advertisement
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலியும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் அறிவித்துள்ளனர். இருவருக்கும் கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement