கிருஷ்ணகிரி : மின்சார வசதி ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை!
02:25 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement
தளி அருகேயுள்ள தாசையன் மடுவு கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஒரே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் 10 வீடுகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது வரை மின்சார வசதி வழங்கப்படாத நிலையில், அரசு இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement
Advertisement