கிருஷ்ணகிரி : விவசாய குட்டைக்குள் விழுந்த யானை பத்திரமாக மீட்பு!
12:03 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே குட்டைக்குள் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
Advertisement
தேன்கனிக்கோட்டையை அடுத்த மூக்கங்கரை கிராமத்தில், குண்டப்பன் என்பவருக்குச் சொந்தமான விவசாய குட்டையில் காட்டு யானை தவறி விழுந்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதிக்கு விரைந்து வந்து ஜேசிபி வாகனம் மூலம் பாதை அமைத்துக் காட்டு யானையைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
Advertisement
Advertisement