கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேட்டரி கார்கள் இயக்கப்படவில்லை! - பொதுமக்கள் அவதி
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3வது நாளாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சென்னை மாநகரில் இருந்து வரும் பயணிகளை அழைத்து செல்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், போதிய வாகனங்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
போதிய அளவு பேட்டரி கார்கள் இயக்கப்படாததால், உடமைகளை தூக்கி கொண்டு மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து சென்றனர். ஒரு சில பயணிகள் உடமைகளை எடுத்து செல்லும் ட்ராலியில் குழந்தைகளை அமரவைத்து தள்ளி சென்றனர்.
இந்நிலையில், தொடர் விடுமுறை நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்அதிகளவில் பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.