கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
02:30 PM Dec 11, 2024 IST | Murugesan M
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு முழுவதும் மின் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத் துறையினர் அறிவித்திருந்தனர்.
Advertisement
மாலை 5 மணிக்கு மேல் மின் விநியோகம் செய்யப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இரவு முழுவதும் மின்விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
Advertisement
Advertisement