கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் - லேசர் மீட்டர் மூலம் பணிகள்!
12:52 PM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
சிவகங்கை மாவட்டம், கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க லேசர் மீட்டர் மூலம் அளவீடு பணிகள் நடைபெற்றது.
Advertisement
திறந்த வெளி அருங்காட்சியக பணிக்காக மண் பரிசோதனை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லேசர் மீட்டர் மூலம் அளவீடு பணிகள் நடைபெற்றது. 7 -ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அகழாய்வு நடந்த மற்ற இடங்களையும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டது.
இதற்காக, 17 நில உரிமையாளர்களிடம் இருந்து நான்கரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 17 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement