குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை - நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
10:50 AM Oct 27, 2024 IST
|
Murugesan M
குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
Advertisement
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
Advertisement
பின்னர் வதோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பார்வையிடும் பிரதமர், பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்க உள்ளார். மேலும், 4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement