குஜராத் - வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்!
07:50 AM Apr 09, 2025 IST
|
Ramamoorthy S
குஜராத்தில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே தலைமையில் அக்கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரத்திற்கு, கடும் வெயில் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் திடீரென மயக்கமடைந்த அவரை உடனிருந்த நிர்வாகிகள், ஆம்புலன்ஸ்-ல் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கத்தால் தனக்கு நீரிழப்பு ஏற்பட்டதாகவும், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தான் நலமுடன் இருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement