செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குடியரசு தின விழா - வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

02:25 PM Jan 26, 2025 IST | Sivasubramanian P

குடியரசு தின விழாவில், வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

Advertisement

மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு வழங்கப்பட்டது.

அண்ணா பதக்கத்தை சென்னையை சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேலுவுக்கும், சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருதை தேனியை சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் முதலமைச்சர் வழங்கினார்.

Advertisement

இதனை தொடர்ந்து காந்தியடிகள் காவலர் பதக்கங்கள் மொத்தம் 5 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சின்ன காமன் பதக்கம் பெற்றுக்கொண்டார்.

விழுப்புரம் சட்ட ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகா மார்க்ஸ், துறையூர் மதுவிலக்கு தலைமை காவலர் கார்த்திக், சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்கள் சிவா மற்றும் பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் குடியரசு தின விழாவில், தமிழகத்தில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை மாநகர காவல் நிலையம் பெற்றது. இரண்டாம் பரிசு திருப்பூர் மாநகர காவல் துறைக்கும், மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

 

Advertisement
Tags :
26 january26 january parade26 january parade 2025MAINMK StalinRepublic dayrepublic day 2025Republic Day paraderepublic day parade 2025republic day parade 2025 livetalin honored those who performed brave deeds with awardstamilnadu
Advertisement
Next Article