செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குடியரசு துணை தலைவர் சென்னை வருகை - போக்குவரத்து மாற்றம்!

09:24 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண விழா மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். இதனை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பழைய மகாபலிபுரம் சாலையை மாற்றுப் பாதையாகப் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி வரை விமான நிலையம் முதல் ECR வரை உள்ள சாலையைப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDFormer Vice President Venkaiah Naiduhome minister amit shahMahabalipuram.MAINTraffic diversion chennaiVenkaiah Naidu's house wedding ceremonyVice-President Jagdeep Dhankhar
Advertisement