குடியிருப்பு அருகே சுற்றித்திரியும் கரடி - பொதுமக்கள் அச்சம்!
05:17 PM Apr 09, 2025 IST
|
Murugesan M
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Advertisement
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கரடி சிக்கியது.
இதனை வனத்துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்த நிலையில், அங்கு மீண்டும் கரடி உலா வருகிறது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கரடியை வனத்துறை விரைந்து பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement