குடியிருப்பு ஒன்றில் நுழைந்த 3 காட்டு யானைகள்!
01:04 PM Jan 21, 2025 IST | Murugesan M
மேட்டுப்பாளையம் அருகே குடியிருப்பு ஒன்றில் நுழைந்த 3 காட்டு யானைகள், மாட்டு தீவனங்களை உண்டு சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலமலை அடிவார பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
Advertisement
பாலமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில் 3 காட்டு யானைகள் நுழைந்துள்ளன.
மேலும், அவரது வீட்டில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டிருந்த பருத்திக் கொட்டை, குச்சி தீவனங்களை உண்டு சென்றுள்ளன.
Advertisement
செல்வராஜ் குடும்பத்தினர் வெளியே வராமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், பசி தாங்காமல் கால்நடைகளின் தீவனத்தை உண்ட யானைகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Advertisement