குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
01:25 PM Apr 01, 2025 IST
|
Murugesan M
இலங்கையிலிருந்து அகதியாகத் தமிழகம் வந்த தம்பதியருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
கடந்த 1984-ஆம் ஆண்டு சரவணமுத்து, தமிழ்செல்வி தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியா வந்தனர்.
இவர்களுடைய மகள் ரம்யா இந்தியக் குடியுரிமை கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அதனை மத்திய அரசு நிராகரித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
வழக்கை விசாரித்த நீதிமன்றம் விண்ணப்பம் மீது சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு முடிவெடுக்கும் வரை இந்தியாவிலிருந்து மனுதாரரை வெளியேற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தது.
Advertisement