குட்கா வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
குட்கா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகலை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்றதாக டெல்லி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி,வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆஜராகவில்லை.
அவர்கள் அடுத்த விசாரணைக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணையை மார்ச் மாதம் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஆணையிட்டார்.