குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்னை அமோகம்!
05:31 PM Mar 28, 2025 IST
|
Murugesan M
கிருஷ்ணகிரி அருகே யுகாதி மற்றும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வாரச் சந்தையில் 8 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement
தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி மற்றும் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது.
10 கிலோ எடை கொண்ட ஆடு 9 ஆயிரம் முதல் எடைக்கேற்ப 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. மேலும் இந்த சந்தையில் ஒரே நாளில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Advertisement
Advertisement