குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி பட்டமளிப்பு விழா - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
01:22 PM Apr 10, 2025 IST
|
Ramamoorthy S
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவுத் தூணுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக அங்கு வைக்கப்பட்டுள்ள நினைவு தூணிற்கு அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
Advertisement
ராஜ்நாத் சிங் வருகையை ஒட்டி குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Advertisement