’குபேரா’ அப்டேட் கேட்ட ரசிகர் - பதிலளித்த ராஷ்மிகா!
07:15 PM Mar 29, 2025 IST
|
Murugesan M
குபேரா திரைப்படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகருக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார்.
Advertisement
இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குபேரா' அப்டேட் என்ன என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, தனக்குத் தெரிந்ததெல்லாம் ஜூன் 20-ம் தேதி குபேரா ரிலீஸ் ஆகும் என்பது மட்டும்தான் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் வித்தியாசமானதாக இருக்கும் அதே வேளையில், மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என ராஷ்மிகா கூறியுள்ளார்.
Advertisement
Advertisement