குப்பைத் தொட்டியில் திடீரென வெடித்த மர்மபொருள் - தூய்மை பணியாளர் பலி!
04:34 PM Mar 23, 2025 IST
|
Ramamoorthy S
தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.
Advertisement
தெலங்கானா மாநிலம் குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளரான நாகராஜு ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம பொருள் வெடித்துச் சிதறியதில் நாகராஜு சம்பவ இடத்திலேயே பலியானார்.
போலீஸார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement