குமரியில் உள்வாஙகிய கடல் - விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தம்!
12:59 PM Mar 30, 2025 IST
|
Ramamoorthy S
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Advertisement
வார விடுமுறையை கொண்டாட கன்னியாகுமரிக்கு வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள், சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். படகு சவாரி மூலமாக கடலுக்கு நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் பார்வையிடுவது வழக்கம்.
அந்த வகையில், படகு சவாரி செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது கடல் திடீரென உள்வாங்கியதால் படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள், மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
Advertisement
Advertisement