செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குமரியில் 6, 559 கி.மீ. தூர விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்!

07:18 AM Apr 01, 2025 IST | Ramamoorthy S

கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 6 ஆயிரத்து 559 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கன்னியாகுமரியில் பேரணியை நிறைவு செய்தனர்.

Advertisement

மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 7-ம் தேதி "வளமான இந்தியா - பாதுகாப்பான இந்தியா" எனும் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் பக்காளி கடல் பகுதியில்
125 பேர் கொண்ட இரு வேறு குழுவினர் இந்த சைக்கிள் பேரணியை தொடங்கினர்.

இந்நிலையில் இந்த குழுக்கள் ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்கள் வழியாக சுமார் 6 ஆயிரத்து 559 கிலோமீட்டர் தூரத்தை கடந்து திங்கள்கிழமையன்று கன்னியாகுமரியை வந்தடைந்தன. அக்குழுவினருக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை இயக்குனர் ரஜ்வீந்தர் சிங் பட்டி தலைமையிலானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Advertisement

 

Advertisement
Tags :
awareness cycle journeyCentral Industrial Security ForcekanyakumariMAINProsperous India - Safe India
Advertisement
Next Article