கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல் - பாஜக ஆர்ப்பாட்டம்!
11:17 AM Dec 08, 2024 IST | Murugesan M
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பு பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையிலிருந்து கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்நிலையில் , 2021 சட்டபேரவை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100-வது நாளில், கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்தும் வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement