கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில் நந்தி சிலை கண்டுபிடிப்பு!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் உட்பிரகாரத்தில், அழகிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
Advertisement
கும்பகோணத்தின் மையப்பகுதியில் தொன்மையான ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 1500 ஆண்டுகள் பழமையானது.உலகப் புகழ்பெற்ற மகாமக விழாவினை தொடர்புடைய இந்த ஆலயத்தில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது .
ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் கழிவுநீர் செல்லும் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. அப்போது அழகிய வேலைப்பாடுகள் அமைந்த 3 அடி உயரமும் இரண்டரை அடி நீளமும் கொண்ட கருங்கல்லால் ஆன அழகிய நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்துநந்தி சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் வேகமாக பரவியது . இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.
இந்த நந்தி சிலை சோழர் காலத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நந்தி சிலையின் ஒரு பகுதி லேசாக பின்னம் அடைந்துள்ளது. நந்தி சிலையின் மேல் அழகிய வேலைப்பாடுகள் அமையப் பெற்றுள்ளது. இந்த கருங்கல்லாலான நந்தி சிலையை தற்போது கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.