செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பகோணம் திருநறையூர் ராமநாத சுவாமி கோயில் 108 சங்கு அபிஷேகம்!

11:05 AM Dec 10, 2024 IST | Murugesan M

கும்பகோணம் அருகே ராமநாதசுவாமி கோயிலில் 108 சங்கு அபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

திருநறையூர் பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோயில் சனீஸ்வர தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்குகளை லிங்க வடிவில் அமைத்து அதற்கு சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராமநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்த சிவபெருமானுக்கு மகா தீபாரதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

Advertisement

Advertisement
Tags :
108 sangabhishekamKumbakonamMAINRamanathaswamy templeThirunaraiyur
Advertisement
Next Article