கும்பகோணம் பேருந்து நிலைய இடமாற்ற தீர்மானத்தை ரத்து செய்ய பாஜக வலியுறுத்தல்!
10:46 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
கும்பகோணம் மாநகராட்சியில், பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவது தொடர்பான நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யாவிடில் மக்களை திரட்டி பாஜக போராட்டம் நடத்தும் என தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தங்க. கென்னடி தெரிவித்தார்.
Advertisement
கும்பகோணம் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வழக்கறிஞர் தங்க .கென்னடி, தமிழகத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகம் விழா வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு இதுவரை செய்யவில்லை என குற்றச்சாட்டினார்.
Advertisement
Advertisement