செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு!

04:57 PM Apr 01, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாகப் புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாகத் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வழக்கறிஞர் சஞ்சய் காந்தி, காவேரி படுகைகளில் மட்டுமே விளையக்கூடிய கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே செய்யக்கூடிய தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

இதுவரை 62 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று இந்திய அளவில் 2-வது இடத்தில் தமிழகம் இருப்பதாகக் கூறினார். இதே போல் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற்று தமிழகத்தில் முதல் மாவட்டமாகத் தஞ்சை விளங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
Geographical indication for Kumbakonam betel nutMAINThovalai manicka garland!தோவாளை மாணிக்க மாலைபுவிசார் குறியீடு
Advertisement