செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்பமேளா விஐபி பாஸ் ரத்து - உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு!

12:24 PM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

கும்பமேளாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததையடுத்து விஐபி பாஸ்களை ரத்து செய்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கும்பமேளா நிகழ்வின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து கும்பமேளா நடைபெறும் பகுதிகளை சுற்றி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

அந்த வகையில், மகா கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும், தேவையற்ற வாகனங்கள் வருவதை தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக அயோத்தி - பிரயாக்ராஜ், கான்பூர் - பிரயாக்ராஜ் உள்ளிட்ட வழித்தடங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மகா கும்பமேளாவில் விஐபி பாஸ்களை ரத்து செய்யவும், பக்தர்களுக்கு உணவு குடிநீர் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDhistory of kumbh melakumbhKumbh Melakumbh mela 2025kumbh mela 2025 prayagrajkumbh mela indiakumbh mela prayagrajKumbh Mela stampedemaha kumbhMaha Kumbh Melamaha kumbh mela 2025Mahakumbh Mela 2025MAINprayagraj kumbh 2025prayagraj kumbh melaprayagraj kumbh mela 2025up governmentvip pass cancelled
Advertisement