செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

கும்ப மேளாவில் கூட்ட நெரிசல் - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

12:46 PM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்ப மேளாவில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கேடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அதிகாலையில் உடைந்ததால், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  காயமடைந்த 50- க்கும் மேற்பட்டோருக்கு ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் உயிரிழந்தோர்  குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பிரயாக்ராஜ் மஹாகும்ப மேளாவில் நடந்த விபத்து மிகவும் வருத்தமளிப்பதாகவும்,  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் உள்ளூர் நிர்வாகம் அனைத்து வழிகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்துடன்  பேசியுள்ளதாகவும், மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAIN
Advertisement