செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் - அண்ணாமலை

06:53 AM Mar 29, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

‘குருவி’ படத்தின் மூலம் ரெட் ஜெயின்ட் மூவிஸுக்குத் திறப்பு விழா நடத்தியதே விஜய்தான் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தாக கூறினார்.  தேர்தலுக்கு நிறைய கால அவகாசம் உள்ளதாவும், பாஜக நலனைவிட முக்கியமானது தமிழக மக்களின் நலன். உள்ளிட்டவற்றை ஆலோசித்து, கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவார்கள் என தெரிவித்தார்.

அவர்தான் தமிழக மக்களுக்கு ரெட் ஜெயின்ட் மூவிஸை அறிமுகப்படுத்தியவர் விஜய் தான் என்றும்,  ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படத்தின் தயாரிப்பு மட்டும் அல்ல, விநியோகத்தையும் ரெட் ஜெயின்ட்தான் பார்த்ததாக தெரிவித்தார்.

Advertisement

தமிழக மக்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல் தவெக நிகழ்ச்சிகளில் மட்டும் வசனங்கள் பேசுகிறார் விஜய் எனறும், கட்சியை லாட்டரி விற்பனைக் கழகமாக மாற்ற வேண்டும் என்பது தான் ஆதவ் அர்ஜுனாவின் நோக்கம் எனவும் அண்ணாமலை விமர்சித்தார்.

தவெக-வில் இருக்கும் ஒருவர் லாட்டரிப் பணத்தை வைத்து,திமுகவுக்கு வேலைப் பார்த்ததாகவும்,  அங்கிருந்து  விசிக-வுக்கு சென்றதாகவும், தற்போது தவெக-வுக்கு தாவி இருப்பதாக தெரிவித்தார்.  தமிழக வெற்றிக் கழகத்தை, லாட்டரி விற்பனைக் கழகமாக மாற்ற வேண்டும் என்பது அவரது நோக்கம் என்றும் அண்ணாமலை கூறினார்.

Advertisement
Tags :
annamalaiannamalai pressmeetbjpdelhiFEATUREDMAINVijay
Advertisement