செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் வகையில் நிபந்தனை விதிக்கலாம் - உயர் நீதிமன்றம்

10:03 AM Dec 08, 2024 IST | Murugesan M

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில், பதான் அப்சர் உசேன், ஜீவானந்தம் ராஜேஷ் ஆகியோர் வெளிநாடுகளுக்குப் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவார் என்ற அச்சம் சிபிஐ போன்ற புலன் விசாரணை அமைப்புகளுக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

அவர்கள் நாடு திரும்பக் கூடிய அளவில் விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வெளிநாடு செல்லும் உரிமையை வழங்குவதுடன், அவர் நாடு திரும்புவதை உறுதிசெய்யும் வகையில் நிபந்தனைகளை விதிக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.

லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றங்கள், குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும்படி நிபந்தனை விதிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர்கள் இருவரும் தலா 10 லட்சம் ரூபாய்க்கு சொந்த பிணையும், அதே தொகைக்கு இரு நபர் பிணையும், உறவினரின் பாஸ்போர்ட்டை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென நிபந்தனை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைத்து, மனுதாரர் இருவரும் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
Tags :
Absher Hussainaccused going abroadlookout noticemadras high courtMAIN
Advertisement
Next Article