செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குற்றவாளி மேடையேறிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்!

02:06 PM Mar 27, 2025 IST | Murugesan M

ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி விழாவில், சரித்திர பதிவேடு குற்றவாளி மேடையேறிய விவகாரத்தில் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 22ஆம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவியின் கணவரும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவருமான கணேசன் என்பவர் மேடையேறி சினிமா பாலை பாடி, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாவை நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில், அவரது கணவர் அழையா விருந்தாளியாக வந்து கலந்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

Advertisement

இதனை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரனைக் காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
Tags :
Headmaster transferred over the issue of the accused taking the stage!MAINதலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்
Advertisement
Next Article