குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
07:55 AM Apr 05, 2025 IST
|
Ramamoorthy S
கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் குற்றாலத்தில் கனமழை பெய்தது. இதனால், குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
Advertisement
Advertisement