குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3-வது நாளாக குளிக்க தடை!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 3வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்தது. தென்காசி மாவட்டத்திலும் குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்ததால் நேற்று மாலை குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.
இன்று 3வது நாளாக பேரருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் புலியருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்
மெயின் அருவியில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும், சுமங்கலி பெண்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.