செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குற்றால அருவிகளில் குளிக்க 4-வது நாளாக தொடரும் தடை!

12:54 PM Dec 15, 2024 IST | Murugesan M

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்தபோதும், சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் இதுவரை இல்லாத அளவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெருவெள்ளம் காரணமாக அருவி கரையின் பல பகுதிகள் சேதம் அடைந்தன.  போலீசார் கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தி வந்த கூண்டு அடியோடு அடித்துச் செல்லப்பட்டது . பாலத்தின் சில பகுதிகளும் சேதம் அடைந்தது .

Advertisement

வெள்ளத்தில் பெரிய அளவிலான கற்களும் மரங்களும் அடித்து வரப்பட்டதால் அருவி கரைகள் பெரும் சேதம் அடைந்துள்ளது. தற்போது குற்றாலத்தில் மழை இல்லாத நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது .

எனினும் குளிக்க விதிக்கப்பட்ட தடை நான்காவது நாளாக நீடிக்கிறது. அருவிக்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Advertisement
Tags :
courtallamCourtallam waterfallsFEATUREDMAINtenkasiTouristsunprecedented flooding.
Advertisement
Next Article