குலசேகரன்பட்டினத்தில் கோயில் நில ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து தரைமட்டம்!
09:36 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
Advertisement
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோயிலில் நடைபெறும் தசரா திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இதனால், ஆண்டுதோறும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயிலை சுற்றி அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் , இதன் காரணமாகவே கூட்ட நெரில் ஏற்படுவதாகவும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
Advertisement
Advertisement