செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலன் கொலை : காதலி உள்ளிட்ட 2 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு!

02:58 PM Jan 17, 2025 IST | Murugesan M

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், காதலி உள்பட 2 பேர் குற்றவாளி என கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ், ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

ஆனால், கிரீஷ்மாவின் ஒப்புதலுடன், அவரது பெற்றோர் ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

Advertisement

இதனை அறிந்த காதலன் ஷாரோன் ராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி காதலி கிரீஷ்மாவிடம் கதறி அழுதுள்ளார்.  திருமணத்திற்கு தடையாக ஷாரோன்ராஜ் இருப்பார் என நினைத்து, அவரை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கிரீஷ்மா கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு கேரளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,
காதலனை கொலை செய்த கிரிஷ்மா, அவரது மாமா ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

Advertisement
Tags :
HIGH COURT OF KERALAkanniyakumariLover's murder caseMAIN
Advertisement
Next Article