செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குழந்தை தொடர்பான வீடியோ பதிவிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை - யூடியூபர் இர்பான் விளக்கம்!

01:40 PM Oct 26, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என விளக்கமளித்துள்ளார்.

Advertisement

யூடியூபர் இர்பான் தனது மனைவியை பிரசவத்திற்காக சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வகையில் அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக இர்பானிடம் விளக்கம் கேட்டு மருத்துவத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனரிடம் யூடியூபர் இர்பான் விளக்கக் கடிதம் வழங்கியுள்ளார்.

Advertisement

அதில் வெளிநாட்டில் இருப்பதால் கடிதத்தின் மூலமாக தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் இர்பான் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
aby's umbilical cordFEATUREDirfan explainMAINmedical departmentYouTuber Irfan
Advertisement