For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய 3 பேர் உயிரிழப்பு!

12:54 PM Jan 22, 2025 IST | Murugesan M
குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய 3 பேர் உயிரிழப்பு

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியபோது 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் நாட்டில் கடலூர் மங்கலம்பேட்டைசேர்ந்த 2 இருவர், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேர் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்தனர்.

Advertisement

உரிமையாளர்கள் அளித்த அறையிலேயே 4 பேரும் தங்கியிருந்த நிலையில், குவைத்தில் கடும் குளிர் நிலவுவதால் அறைக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

பின்னர், அறையின் உள்ளேயும் தீ மூட்டிவிட்டு, 4 பேரும் உறங்கச் சென்றனர். அப்போது, தீ எரிந்து கொண்டிருந்தால் அறையில் ஆக்சிஜன் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடலூரைச் சேர்ந்த கமது யாசின், முகமது ஜுனைத் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, குவைத்தில் உயிரிழந்தோரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement