குவைத் பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை!
06:00 PM Dec 22, 2024 IST
|
Murugesan M
குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷபா அல் காலீத் அல் ஷபாவை சந்தித்து பேசினார். பின்னர் அந்நாட்டு முக்கிய பிரதிநிதிகளுடனும் அவர் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article