கூகுள் மேப் பார்த்து சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து!
12:51 PM Mar 18, 2025 IST
|
Murugesan M
கேரள மாநிலம் மலப்புரத்தில் கூகுள் மேப் பார்த்துச் சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisement
கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார்.
செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு சதானந்தன் என்பவர் காரை ஓட்டிய நிலையில், காயத்ரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.
Advertisement
உடனடியாக அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், கிரேன் மூலம் ஆற்றில் மூழ்கிய கார் மீட்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement