கூடலூர் அருகே கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்!
12:57 PM Jan 28, 2025 IST
|
Sivasubramanian P
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கரடி தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தார்.
Advertisement
கூடலுார் கண்ணகி நகரைச் சேர்ந்த கோபால் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இலவ மரங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இலவ மர தோப்பிற்கு நடந்து சென்றபோது, புதருக்குள் மறைந்திருந்த கரடியொன்று அவரை கொடூரமாக தாக்கியது.
இதில் கோபாலின் முகம் சிதைந்த நிலையில், அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள விவசாயிகள், கரடியை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement